சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கம் பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கும் இந்தியா ஆபரணங்கள் தயாரிப்புக்காகவே அதிகமான தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இறக்குமதிக்கு அதிகம் செலவிட நேரும்போது அதன் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் தங்கம் விலை உயர்த்தப்படுகிறது.
நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. எனினும் கடந்த நான்கு நாட்களாகவே தங்கம் விலை கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையில் இன்று (நவம்பர் 28) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 3,611 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,612 ஆக இருந்த நிலையில் இன்று ஒரு ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 28,896 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 28,888 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இன்று சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது.