அடிக்கடி வாய்ல புண் வருதா?... மஞ்சளை மட்டும் வெச்செ எப்படி சரிபண்ணலாம்?

வாயில் அவ்வப்போது புண்கள் வந்தால் உடல் சூட்டின் காரணமாக வருகிறது என்று சொல்லி விட்டுவிடுகிறோம். ஆனால் அடிக்கடி வந்தால் அது எவ்வளவு ஆபத்தில் போய் முடியும் என்று தெரியுமா?... தெரிந்து கொண்டு நம் வீட்டிலுள்ள மஞ்சளை வைத்து எப்படி சரிசெய்து கொள்ள முடியும் என்று இங்கே பார்க்கலாம்.


வாய்ப் புண்கள் போன்ற மோசமான நோய் வேறு எதுவும் இல்லை. ஒரு சிறிய வாய்ப் புண் உங்களை பல நாட்களுக்கு வாரங்களுக்கு உணவு உண்ணமுடியாமல் செய்து விட முடியும். இந்த நோயை ஏற்படுத்தும் பல காரணங்கள் இருந்தாலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இயற்கையாகவே குணமடைய பல நாட்கள் ஆகும்.


 

வாய்ப் புண்கள் ஏற்பட பல காரணங்கள் உள்ளன, ஆனால் வாய்ப் புண்களாகல் ஏற்படும் மோசமான விளைவுகளை தவிர்ப்பது மற்றும் அவற்றை எவ்வாறு திறம்பட குணப்படுத்துவது என்பதே கேள்வி, ஏனெனில் அவை உணவு உண்பதையும் அருந்துவதையும் மிக கடினமாக்கி விடும். இதனால் ஏற்படும் வலியும் உபாதைகளும் திரவ உணவிலேயே வாழ வழி வகுக்கும்.

எனினும் , இயற்கையாகவே இவற்றை குணப்படுத்த வேண்டுமென்றால் நம் முன்னோர்கள் பின்பற்றிய முறைக்கு செல்வதை விட சிறந்தது எதுவுமில்லை. பண்டைய ஆயுர்வேத குறிப்புகளில் கூட, பல நோய்களுக்கு இயற்கையான சிகிச்சைமுறை கிடைக்கும். மற்ற நோய்களைப் போலவே, வாய்ப் புண்களுக்கு எளிதான சிகிச்சையாக, வீட்டு மருந்தான மஞ்சளை சேர்ப்பது வெகு விரைவில் குணமடைய செய்யும் என்பது சுவாரஸ்யமான உண்மையாகும்.