மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “விபத்தில் உயிரிழந்த 4 குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். அதேபோல் தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி மேட்டுப்பாளையம் சென்று பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிடுகிறார்” எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த உள்ளாட்சி தேர்தலின் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தக்கூடாதெனறும் அறிவித்துள்ளது.