கோவில்பட்டியில் பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் படத்தினை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவராக இருக்கும் பி. டி. அரசகுமார், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முதல்வர் ஆவர் என்று வாழ்த்திப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்தும், பி.டி. அரசகுமாரை கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் பி.டி. அரசகுமார் படத்தினை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி மண்டல கமிட்டி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நகர புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.